ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியீட்டில், சன் பிக்சர்ஸ் வழங்க, ராகவா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘காஞ்சனா 2’ படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் டாப்ஸீ, நித்யா மேனன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘யு-ஏ’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ள இந்தப் படம் ‘காஞ்சனா’ படத்தின் முதல் பாகம் போலவே ஒரு பரபரப்பான வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
த்ரில்லர் படமாகவும், அதே சமயம் நகைச்சுவைக் கலந்த விதத்திலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.