ஜனநாயகன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் 2026 ஜனவரி 3 அன்று வெளியானது.
விஜய் நடித்து எச். வினோத் இயக்கிய இப்படத்தின் டிரைலரை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வெளியிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி, மொழிகளில் வெளியாகி உள்ள 2 நிமிட 52 வினாடி டிரைலரில் விஜய்யின் தீவிர ஆக்ஷன் காட்சிகள் அரசியல் சமூகக் கருப்பொருள்கள் பெண் சக்தி மற்றும் ஜனநாயகம் தொடர்பான தீம்கள் இடம்பெற்றுள்ளன.
ஐ ஆம் கமிங் போன்ற வசனங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தின. முதல் 24 மணி நேரத்தில் பல்லாயிரக்கணக்கான வியூஸ் பெற்ற இந்த டிரைலர் பெரும் வரவேற்பைப் பெற்றது.
படம் முதலில் ஜனவரி 9 அன்று ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்தது. சான்றிதழ் பிரச்சினைகள் காரணமாக இப்போது ஜூலை 23, 2026 அதாவது நாளை உலகளவில் வெளியாகிறது.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தயாரிப்பு – கேவிஎன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – எச் வினோத்
இசை – அனிருத்
ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன்
படத்தொகுப்பு – பிரதீப் ராகவ்
ஸ்டன்ட் – அனல் அரசு
நடனம் – சேகர், சுதன்
நடிப்பு – விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியா மணி, நரேன் மற்றும் பலர்.