பட்டைய கௌப்பணும் பாண்டியா – விமர்சனம்

Pattaya Kelappanum Pandiya - Gallery_00003 விஜய் நடித்த ‘சுறா’ படத்தை இயக்கிய பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கி நகைச்சுவையில் பட்டைய கௌப்பியிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜகுமார். அவர் இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த ‘என் புருசன் குழந்தை மாதிரி, கார்மேகம், அழகர் மலை’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தையும் நகைச்சுவைக் காட்சிகள் மூலம் ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திருக்கிறார். அதற்கு சூரி பெரிதும் துணை புரிந்திருக்கிறார். பெருசா சீரியசான கதையெல்லாம் படத்துல இல்லை. ஒரு மினி பஸ்ல அண்ணன் தம்பியான விதார்த்தும், சூரியும் டிரைவராவும், கண்டக்டராவும் இருக்காங்க. அவங்க பஸ்ல தினமும் வந்து போற நர்ஸான மனிஷா யாதவ் மேல காதலா இருக்கிறாரு விதார்த். ஆனால், மனிஷா, விதார்த் கிட்ட முகம் கொடுத்துக் கூட பேச மாட்டாங்க. ஒரு கட்டத்துல அவங்ககிட்ட நேரடியாவே காதலைப் பத்திக் கேக்கறாரு விதார்த்.  அப்பா இல்லாத குடும்பம், கண் தெரியாத அக்கா, இப்படி குடும்ப சூழ்நிலை காரணமா மனசுல காதல்லாம் வர வாய்ப்பில்லைன்னு சொல்றாரு மனிஷா.  இவங்க குடும்பத்துப் பிரச்சனையை தீர்த்து வச்சால் தன்னோட காதல் கை கூடும்னு விதார்த் நினைக்கிறாரு. கண் தெரியாத மனிஷாவோட அக்காவுக்கு மாப்ளிள்ளை பார்க்கிற பொறுப்பை ஏத்துக்கிறாரு. அதுக்கிடையில மனிஷாவுக்கும் விதார்த் மேல காதல் வர குடும்பப் பிரச்சனையெல்லாம் தீர்ந்து விதார்த் – மனிஷா இணைஞ்சாங்களா இல்லையாங்கறதுதான் படத்தோட கதை. கொஞ்சம் கூட அலட்டிக்காம அப்படியே போற போக்குல நடிச்சிட்டுப் போறாரு விதார்த். அவரோட கேரக்டரே அப்படி இருக்கிறதால அப்படி நடிச்சாரா, இல்லை விதார்த்தோட நடிப்பு அப்படி இருக்கிறதால அந்தக் கேரக்டர் அமைஞ்சுதான்னு தெரியலை. இருந்தாலும் சூரிக்கு முன்னாடி இவரால சரியா ஸ்கோர் பண்ண முடியலையோன்னு தோணுது. படத்துல ஏறக்குறைய இரண்டாவது ஹீரோ சூரிதான். படம் முழுக்க வந்தால் இரண்டாவது ஹீரோன்னு சொல்லாம நகைச்சுவை நடிகர்னா சொல்றது. படத்தைக் காப்பாத்தறதே இவர்தான். படக் படக்னு கமெண்ட் அடிச்சிட்டு போயிட்டேயிருக்கிறாரு. படத்துல அதிகமான டயலாக் கூட இவருக்குத்தான் இருக்கும் போல. அடுத்ததா மினி பஸ் ஓனரா வர்ற இமான் அண்ணாச்சி. இதுவரைக்கும் அவர் நடிச்சிருக்கிற படத்துலேயே உருப்படியான ஒரு படமும், கதாபாத்திரமும் இந்தப் படத்துலதான் அமைஞ்சிருக்கு. விதார்த், சூரி கிட்ட மாட்டிக்கிட்டு இவர் படறதுதான் அவஸ்தையா இருந்தாலும் நமக்கு சிரிப்பாதான் இருக்கு. மனிஷா யாதவ், வெள்ளை உடையில் ஒரு தேவதை. இதுக்கு முன்னாடி நடிச்ச படங்கள்ல விட இந்தப் படத்துல கொஞ்சம் அதிகமா நடிக்க வாய்ப்பு. கனவுப் பாடல் கட்சியில் மட்டும்தான் கொஞ்சமே கொஞ்சம் கிளாமரா வர்றாங்க. இளவரசு, கோவை சரளா, டிபி. கஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், விஜய் ஆனந்த், இரண்டே காட்சிகளில் வரும்  ஜெயப்பிரகாஷ் மற்ற நடிகர்கள் பட்டியலில் குறிப்பிட வேண்டியவர்கள். அருள் தேவ் இசையில பாட்டும் பெருசா   இல்லை, பின்னணி இசையும் ரசிக்கிற மாதிரி இல்லை. டைட்டில் இசையிலயே ஏதோ டிராமாக்கு வாசிக்கிற மாதிரி வாசிச்சிருக்காரு. பல கோடி ரூபாய் செலவு செஞ்சி எடுக்கிற படங்களை விட இந்த மாதிரியான சிம்பிளான படங்களை ரசிகர்கள் வரவேற்றால், சின்ன படங்களும் தாராளமா தப்பிச்சிடும்.  

Read Previous

வலியுடன் ஒரு காதல் – விமர்சனம்

Read Next

அமர காவியம் – விமர்சனம்

Most Popular