ஜியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
முழுக்க முழுக்க இன்றைய இளைஞர்களைக் கவரும், காதல் கதையாக உருவாகி வரும் ‘வித் லவ்’ படத்தில், ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் மூலம் இயக்குனராகக் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார். “லவ்வர், டூரிஸ்ட் பேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இப்படத்தை இயக்கி உள்ளார்
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக் களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ‘குட் நைட், லவ்வர்’ மற்றும் 2025ம் வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான ‘டுரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.