மில்லியன் ஸ்டுடியோ எம்எஸ் மன்சூர் வழங்க, குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’, அதாவது ஆங்கில ‘Weapon'.
விமர்சகர்களால் வரவேற்பைப் பெற்ற ‘சவாரி’ படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் அடுத்து இயக்கும் படம் இது. அமேசான் ஓடிடி தளத்திற்காக பாபி சிம்ஹா, பார்வதி நாயர் மற்றும் பலர் நடித்த ‘வெள்ளை ராஜா’ வெப் தொடரையும் இயக்கியுள்ளார்.
’தரமணி, ராக்கி’ மற்றும் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் வசந்த் ரவி ஒரு கதாநாயகனாகவும், சத்யராஜ் மற்றொரு கதாநாயகனாகவும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
ஜிசஸ்பென்ஸ், ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சில மலைப்பிரதேசங்களில் நடைபெற உள்ளது.
இன்று சத்யராஜின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை போஸ்ட்ர் வெளியிடப்பட்டுள்ளது.