சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’

சூர்யா நடித்து வரும் அவரது 46வது படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என்ற தலைப்பை அறிவித்துள்ளார்கள்.

‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், வருகிற ஜூலை மாதம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான இசையை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்கிறார். எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை பங்களான் மேற்கொள்கிறார்.

நாக வம்சி, சாயி சௌஜன்யா இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.  சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் மூலம் வெளியிடப்படுகிறது.

 

Read Previous

ஓ பட்டர்பிளை – பத்திரிகையாளர் சந்திப்பு

Read Next

விதார்த் நடிக்கும் ‘தொடக்கம்’, பூஜையுடன் ஆரம்பம்

Most Popular