விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஆர்யன்’ ஆரம்பம்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா, ஆர்யன் ரமேஷ் வழங்க,  விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, பிரவீன் K இயக்கத்தில் உருவாகும் க்ரைம் திரில்லர் திரைப்படமான ‘ஆர்யன்’ படத்தின் பூஜை, படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது.  

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தொடர் வெற்றிகளை தந்து வரும் விஷ்ணு விஷால், ‘ராட்சசன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
புதுமையான திரைக்கதையில், பரப்பரான திருப்பங்களுடன் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், கதாநாயகிகளாக நடிக்க, சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய பாத்திங்களில் நடிக்கின்றனர்.
 

Read Previous

யோகி பாபு நடிக்கும் த்ரில்லர் படம் ‘ஷு’ இசை வெளியீடு

Read Next

‘விடுதலை’ முதல் பாகத்தின் வெளியீடு, விரைவில் அறிவிப்பு

Most Popular