‘விக்ரம் 62’ படப்பிடிப்பு திட்டங்கள்

‘விக்ரம் 62’ படத்தின் படப்பிடிப்பு திட்டங்கள் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

‘சித்தா’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் அருண் குமார். ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வைரமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்திற்கான அறிமுக வீடியோ வெளியாகிவிட்டது.

சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்திற்கான போட்டோ ஷூட் சென்னையில் நடைபெற்றது. இதனை வைத்து படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். இதனை விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அன்றைய தினத்திலிருந்தே தொடர்ச்சியாக படப்பிடிப்பையும் தொடங்கவுள்ளது. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் பிரதான காட்சிகளை படமாக்கவுள்ளார்கள். சென்னையில் பெரிய அரங்கம் ஒன்றும் இதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் 3 கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும், படப்பிடிப்பு நிறைவு பெறுவதைப் பொறுத்து படத்தை டிசம்பரில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

Read Previous

’இந்தியன் 2’ படக்குழுவினர் மீது தொடரும் அதிருப்தி

Read Next

பொன் ஒன்று கண்டேன் ஜாலியான படம் தான் – வசந்த் ரவி