‘கோட்’ படத்தில் யுவன் இசையில் பாடலொன்றை பாடியிருக்கிறார் விஜய்.
சமீபத்தில் தான் நடிக்கும் படங்கள் அனைத்திலுமே பாடலொன்றை பாடிவிடுகிறார் விஜய். அதுவே படத்திற்கு எதிர்பார்ப்பாகவும் அமைந்துவிடுவதால் இசையமைப்பாளர்களும் விஜய் பாடுவதை விரும்புகின்றனர்.
தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். யுவன் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு கேரளாவில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது.
இதில் யுவன் இசையில் பாடலொன்றை பாடியுள்ளார் விஜய். பெங்களூருவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார் யுவன். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.