விஜய்க்கு இசைத்து வாழ்த்திய கீர்த்தி சுரேஷ்

நடிகர் விஜய்க்கு இன்று 47வது பிறந்தநாள். ரசிகர்கள், ரசிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞ்ர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அனைவரது வாழ்த்திலும் நடிகை கீர்த்தி சுரேஷின் வாழ்த்து சிறந்த ஒன்றாக ரசிகர்களைக் கவர்ந்திருக்கும்.

வயலின் வாசிக்கும் திறமை கொண்ட கீர்த்தி சுரேஷ், ‘மாஸ்டர்’ படத்தில் இடம் பெற்ற ‘குட்டி ஸ்டோரி’ பாடலை வயலினில் இசைத்து ‘நோ டென்ஷன் பேபி’ என வாழ்த்து சொல்லியிருக்கிறார். கீர்த்தியின் வயலின் இசைக்கு நடிகைகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

நேற்றே வயலின் வாசிப்பதைப் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வயலின் வாசிக்கும் என்னுடைய பழைய திறமையை இந்த சமயத்தில்தூசி தட்டிப் பார்க்கிறேன்,” என பதிவிட்டிருந்தார். அப்போதே ‘மாஸ்டர்’ பாடலின் இசையையும் வாசித்துவிட்டு அதை இன்று பதிவிட்டிருக்கிறார்.

கீர்த்தியின் வயலின் வாசிப்பு வீடியோ… https://www.instagram.com/p/CBu9mK2pxdj/

Read Previous

விஜய், அஜித், சூர்யா – இரு வேடப் படங்கள்

Read Next

சரத்குமார் – இரு வேடப் படங்கள்