‘பிக் பாஸ்’ முகேன் நடிக்கும் ‘வெற்றி’

நானி, நித்யா மேனன் நடித்து வெளிவந்த ‘வெப்பம்’ படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் அடுத்து ‘வெற்றி’ என்ற ஆக்ஷன் படத்தை இயக்க உள்ளார்.

ஷிர்டி நிறுவனம் சார்பாக முத்தமிழ் செல்வி இப்படத்தைத் தயாரிக்கிறார். 

கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான முகேன் இப்படத்தில் கதாநாயகனாகவும், அனு கீர்த்தி கதாநாயகியாகவும் நடிக்க உள்ளார்கள்.

படம் பற்றி இயக்குநர் அஞ்சனா அலிகான் கூறியதாவது,

“ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும். வெற்றி என்பது நாயகனின் கதாபாத்திரத்தின் பெயர் மட்டுமே அல்ல, அது ஒரு குறியீடு. 

படத்தின் மொத்த கதையுமே வெற்றியை எப்படி அடைவது என்பது தான்.  வாழ்வின் இடர்ப்பாடுகளை கடந்து நாயகன் எப்படி மனித்தத்தோடு தன் லட்சியத்தை அடைகிறான் என்பதே கதை. 

முகேன் ராவை இக்கதாபாத்திரத்திற்கு ஏதேச்சையாகத்தான் தேர்ந்தெடுத்தோம். தோற்றத்தில் இறுக்கத்துடன், முரட்டுத்தனமாக இருப்பவர். தன்னுடன் பழகும் அனைவரையும் எளிதாகக் கவர்ந்து விடும் அன்பான குணமுடையவர். அப்படியே இப்பட கதாபாத்திரத்தின் குணத்துடன் ஒத்துபோகக் கூடியவர். 

முகேன் ராவ் உணர்வுகளை எளிதாக கையாளும் அதே நேரம், ஆக்சன் காட்சிகளையும் எளிதாக செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார். 

அனுகீர்த்தி வாஸ் தமிழ்நாட்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஒரே ஒரு பேரழகி. தான் இருக்கும் இடத்தை ஜொலிக்க வைப்பவர், கடும் உழைப்பாளி. படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். அவர் அழகும், திறமையும் கொண்டவர் மட்டுமல்ல, வெகு சரளாமாக தமிழ் பேசக்கூடியவர். அது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன்,” என்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்க, முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

 

Read Previous

செப்டம்பர் 28ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

செப்டம்பர் 29ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular