2019ல் வெளிவந்து வெற்றி பெற்ற ‘தடம்’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அவருடைய ஐந்தாவது படமாக உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் 14வது படமாகத் தயாராகும் இப்படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இவர் ‘பூமி, ஈஸ்வரன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் மூன்றாவது படம் இது. முதல் படம் வெளியாவதற்கு முன்பே மூன்று படங்களின் கதாநாயகி ஆகிவிட்டார்.
அரோல் கொரேலி இசையமைக்க, தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்.
படத்தின் மற்ற நடிகர்கள், நடிகையர் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.