தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் – டி ராஜேந்தர் அறிவிப்பு

டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா நேற்று டிசம்பர் 5 சென்னையில் நடைபெற்றது.

சங்கத்தின் நிறுவனர்களாக டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா ராஜேந்தர் இருக்கின்றனர். மற்ற நிர்வாகிகள் யாரென்பதையும் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முறைப்படி அறிவித்தனர்.

தலைவர் – டி.ராஜேந்தர்
செயலாளர் – N. சுபாஷ் சந்திர போஸ்
செயலாளர் – JSK. சதிஷ் குமார்
பொருளாளர் – K.ராஜன்
துணை தலைவர் – P.T. செல்வ குமார்
துணை தலைவர் – R. சிங்கார வடிவேலன்
இணை செயலாளர் – K.G. பாண்டியன்
இணை செயலாளர் – M. அசோக் சாம்ராஜ்
இணை செயலாளர் – சிகரம்.R.சந்திர சேகர்

இந்த சங்கத்தின் தற்போதைய முக்கிய செயல்பாடுகள் எவை என்பதை தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

1. புதிய, சிறிய படத்தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்க நினைக்கிறோம்

2. VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களை தவீர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம்.

3. திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கி தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்க்கு, புதிய, உரிய வழி காட்டுவோம்.

4. F.M.S, சாட்டிலைட், O.T.T. மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி லாபம் ஈட்ட முயற்சி மேற்கொள்வோம்.

5. பட வெளியீட்டின் போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாக பேசி தீர்க்க ஆவண செய்வோம்.

இந்த சங்கத்தில் டி.ராஜேந்தர் மகன் நடிகர் சிலம்பரனும் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளாராம். மேலும், பல புதிய உறுப்பினர்கள் சேர்ந்து வருவதாகவும் தலைவர் டிஆ 

Read Previous

டிசம்பர் 6ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

டிசம்பர் 7ம் தேதியில் வெளியான படங்கள்…