‘தலைவி’ – ஓடிடி விலையை வெளியிட்ட கங்கனா ரணவத்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகையான கங்கனா ரணவத் நடிக்கிறார்.

கொரானோ ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் படத்தின் ஓடிடி உரிமைகள் பற்றிய விலையை கங்கனா வெளியிட்டுள்ளார். ஹிந்திப் படத்தின் ஓடிடி உரிமை நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கும், தமிழ்ப் படத்தின் ஓடிடி உரிமை அமேசான் தளத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாம். இரண்டிற்குமான விலை 55 கோடி ரூபாயாம்.

மேலும், இந்தப் படத்திற்கு சாட்டிலைட் உரிமை, வெளியிட்டு உரிமை என அவையும் நல்ல விலைக்குப் போகும். என் படங்களின் பட்ஜெட், அதன் வருவாய் ஆகியவற்றைப் பொறுத்தே சம்பளம் வாங்குகிறேன் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார் கங்கனா.

‘தலைவி’ போன்ற பிரம்மாண்டமான படங்களை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட முடியாது. அவற்றை தியேட்டரில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

‘தலைவி’ படத்தின் ஓடிடி உரிமை முன்னணி நடிகர்களின் படங்களின் விலையை விட அதிகம் என்கிறது தமிழ்த் திரையுலக வட்டாரம்.

Read Previous

‘சூரரைப் போற்று’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

Read Next

கமல்ஹாசன், எஸ்.பி.முத்துராமன் இணைந்த படங்கள்