2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இயைசமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், ஊர்வசி, மோகன் பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’.
இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த குழுவினர் படத்திற்கு அனைவரும் பார்க்கும்படியான ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளார்கள்.
ஏற்கெனவே, இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் சென்சார் ஆகிவிட்டதால் விரைவில் டிரைலரையும் எதிர்பார்க்கலாம்.
கொரானோ ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டபின் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘இறுதிச் சுற்று’ படத்திற்குப் பிறகு சுதா கோங்கரா இயக்கியுள்ள படம் இது.