வியாகாம் 18 என்ற மீடியா நிறுவனத்திற்குச் சொந்தமான ‘கலர்ஸ் டிவி தமிழ்’ இன்று பிப்ரவரி 19, 2019 இரவு 7 மணிக்கு அதன் ஒளிபரப்பைத் துவக்குகிறது.
ஹிந்தி, பங்களா, குஜராத்தி, கன்னடம், ஒடியா, மராத்தி என பல மொழிகளில் கலர்ஸ் டிவி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் டிவி நிறுவனமாக உள்ளது.
‘இது நம்ம ஊரு கலரு’ என்ற அடைமொழியுடன் கலர்ஸ் தமிழ் புதிதாகக் களம் இறங்குகிறது.
புத்தம் புதிய தொலைக்காட்சித் தொடர்கள், பல பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோக்கள் என ஏற்கெனவே இருக்கம் தமிழ் டிவிக்களுக்கு சவால் விடும் வகையில் கலர்ஸ் தமிழின் நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.
நடிகர் ஆர்யா பங்கு பெறும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’, நடிகர் சிவா பங்கு பெறும் ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ உள்ளிட்ட பிரம்மாண்டமான டிவி ஷோக்களும், “பேரழகி, வேலுநாச்சி, சிவகாமி, காக்கும் தெய்வம் காளி’ ஆகிய டிவி தொடர்களும், தமிழில் பெரிதும் வரவேற்கப்பட்ட ‘நாகினி’ தொடரின் 2ம் பாகமும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளன.
அனுப் சந்திரசேகரன் பிசினஸ் ஹெட்டாக பொறுப்பேற்றுள்ள கலர்ஸ் டிவி தமிழ்த் தொலைக்காட்சிகளில் புது கலரைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
கலர்ஸ் டிவியின் சில தொடர்களின், நிகழ்ச்சிகளின் முன்னோட்ட வீடியோ…
https://youtu.be/k7DBSlq96qs
https://youtu.be/iO92WJkyjJQ
https://youtu.be/1OzwQM4zYk0
https://youtu.be/NSjo7664OyY
https://youtu.be/iqU6Ix5IX_c
https://youtu.be/bkxAbfJYFoc