ராஜ் டிவியில் புதிய தொடர் ‘ஹலோ சியாமளா’

ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘ஹலோ சியாமளா’ என்ற மெகா தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8:30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

பிரபல தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வரும் ராமச்சந்திரன் தனது மனைவி சியாமளா மற்றும் நான்கு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். நால்வரையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து படிக்க வைத்து ஆளாக்குகிறார். ராமச்சந்திரன் தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் திருமணமாகி மூத்த பெண் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு கருத்தரிக்கிறாள். அதே நேரத்தில் சியாமளாவும் கர்ப்பம் தரிக்கிறாள். இச்சம்பவம் எல்லோரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மேலும் ஊரார் கேலி பேச்சுக்கும் ஆளாகும் நிலை ஏற்படுகிறது. ஏன் இப்படி செய்தாய் என்று வினவிய தன் மகள்களிடம், இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்கிறாள் சியாமளா. அந்த காரணத்தை தன் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் தன்னை மெச்சுவார்கள் என எதிர்ப்பார்க்கிறாள். ஆனால், அதுவே பெரிய பூகம்பமாக வெடித்து குடும்பம் சிதறிப் போகும் நிலைக்கு வரும் என்று சியாமளா கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள்.

தாயும் சேயும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிப்பது தவறு என்று எந்த புராணத்தில் சொல்லி இருக்கிறது? இந்த குடும்பத்தில், இந்த சம்பவங்களால் வரும் மாற்றங்கள், விபரீதங்கள் போன்ற நிகழ்வுகள் ‘ஹலோ சியாமளா’ தொடர்.

இத்தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் ஈரமான ரோஜாவே சிவா, தீபா, அகிலா, கிருத்திகா, நிவிஷா, திவ்யா நடிக்க, ஒளிப்பதிவாளர் ரவி சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய கோபி. யூ இயக்குகிறார் .

https://youtu.be/-0GUiOvMmcI

Read Previous

‘பியார் பிரேமா காதல்’ படப்பிடிப்பு நிறைவு

Read Next

ராஜ் டிவியில் புதிய தொடர் ‘கண்ணம்மா’

Most Popular