விஜய் டிவியில் புதிய தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

விஜய் டிவியில் அக்டோபர் 1 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’.

அண்ணன், தம்பி நால்வர் குன்னக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர். தன் கணவரின் தம்பிகளை, தன் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்வார்.

இந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைப் பார்த்து ஊரே வியக்கிறது. இந்த ட்டுக் குடும்பத்தில் மற்ற மருமகள்கள் வந்தால் என்னவாகும் ?, இவர்களின் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நீடிக்குமா ?, என்பதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கதை.

இந்த தொடரில் மூத்த அண்ணனாக ஸ்டாலின் நடிக்கிறார். அண்ணியாக சுஜிதா நடிக்கிறார். வெங்கட், குமரன், கவிதா, சித்ரா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சிவா சேகர் இத் தொடரை இயக்குகிறார்.

https://youtu.be/gDmNjLZCJ-g

https://youtu.be/HTZrVwEVg3M

 

Read Previous

பரியேறும் பெருமாள் – விமர்சனம்

Read Next

‘பிக் பாஸ் 2′, வெல்லப் போவது யார் ?

Most Popular