‘பிக் பாஸ் 2′, வெல்லப் போவது யார் ?

விஜய் டிவியில் ஜுன் 17ம் தேதியன்று ஆரம்பமான ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

அன்றைய தினம் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஐஸ்வர்யா தத்தா, ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இந்த சீசனில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ள அனைவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி முதல் சீசனை விட சிறப்பாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தாலும், இந்நிகழ்ச்சி விஜய் டிவியின் ரேட்டிங்கை அதிகமாகவே உயர்த்தியது.

வரும் செப்டம்பர் 30, ஞாயிறு அன்று இரவு 8 மணிக்கு இறுதிப் போட்டி ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

விஜய் டிவியில் புதிய தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

Read Next

சண்டக்கோழி 2 – டிரைலர்

Most Popular