ஜீ தமிழ் – லட்சுமி வந்தாச்சு – தொடர், இனி….

ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நாட்டாமை நாச்சிமுத்துவின் குடும்பத்தில் தங்கவேலுவின் மனைவி தேன்மொழியின் வரவால் புயல் வீசுகிறது.  தன் புருஷன் தான் இந்த வீட்டிற்கு மூத்த பிள்ளை, ஆதலால் தனக்குத் தான் சாவிக் கொத்துவின் மீது அதிகாரம் என்று கூக்குரலிட, நாச்சிமுத்து திட்டவட்டமாக மறுக்க, தேன்மொழி ஏகத்திற்கு கர்ஜிக்கின்றாள்.

ஒரு கட்டத்தில் தேன்மொழியின் திருவிளையாடல்களை நம்பும் தங்கவேல், தன் அன்புத் தம்பியான வெற்றிவேலை கண்டிக்க, லட்சுமியாக நடிக்கும் லட்சுமி இதைக் கண்டு பெரிதும் வருந்துகிறாள்.   இருப்பினும் வள்ளியம்மையை குணப்படுத்தும் தன் முயற்சியில் இருந்து நந்தினி சற்றும் தளரவில்லை.

வெற்றிவேல்தான், தன் எதிர்கால புருஷன் என்ற கனவில் வாழ்ந்து வந்த உண்மையான லட்சுமி தங்கை மோகாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பெண் பித்தனான மைனரை திருமணம் செய்ய முடிவு செய்து, திருமண பத்திரிகையின் முதல் பிரதியை வேண்டுமென்றே வெற்றிவேல், நந்தினி இருவரை தெருவில் வழி மறித்து கொடுக்கிறாள்.  இது வெற்றிவேலுவிற்கு பெரிதும் மன உளைச்சளை அளிக்கின்றது.

இதற்கிடையில் எப்போதெல்லாம் தேன்மொழி மற்றும் அண்ணன் தங்கவேலு, நந்தினி பற்றி அவதூறு பேசுகிறார்களோ அப்போதெல்லாம் வெற்றிவேல், நந்தினிக்கு ஆதரவாக இருக்க, இது நந்தினியின் மனதை நெருடச் செய்கிறது.

லட்சுமி, மைனர் திருமணம் நடந்ததா…? தேன்மொழியின் அடுத்த அதிரடி திட்டம் என்ன ?…என்பதுதான் இனி வரும் வாரங்களில் வரவிருக்கிறது.

உங்கள் ஜீ தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு பரபரப்பான சூழ்நிலையில் புதிய திருப்பங்களோடு தொடர்கிறது ‘லட்சுமி வந்தாச்சு’.

Read Previous

ரோமியோ ஜுலியட் – விமர்சனம்

Read Next

இனிமே இப்படித்தான் – விமர்சனம்

Most Popular