Mr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று

விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘Mr & Mrs சின்னத் திரை’.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறு மாதிரி இருக்கும். இவை அனைத்தும் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள், காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும்.

இந்த வார நிகழ்ச்சியில் குதூகலமான சுற்றாக ‘ட்ரீம் மேக் ஓவர்’ சுற்று நடைபெறுகிறது. இதில் சின்னத்திரை ஜோடிகள் தங்களின் ஜோடியை எந்த ஒரு மேக் ஓவரில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதைக் கூற வேண்டும். அதற்கேற்ப நம் ஜோடிகளும் புது அவதாரம் எடுக்கவுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மணிமேகலை – உசைன், நிஷா – ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம் – ரித்து, தங்கதுரை – அருணா மற்றும் செந்தில் – ராஜலட்சுமி ஆகியோர் என்ன மேக் ஓவரில் வரப் போகிறார்கள் என்பதை வரும் ஞாயிறன்று பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சியில் கோபிநாத், தேவதர்ஷினி, விஜயலட்சுமி நடுவர்களாக இருக்கிறார்கள்.

Read Previous

பிறந்த நாளில் ‘வர்மா’ நாயகி மேகாவுக்குக் கிடைத்த அதிர்ச்சி

Read Next

மிருனாளினி ரவி நடிக்கும் ‘டூப்ளிகேட்’ – டீசர்

Most Popular