இ 4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பாலா இயக்கத்தில், ரதன் இசையமைப்பில், விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாக உருவான படம் ‘வர்மா’.
முழு வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயாரான ‘வர்மா’ படத்தை வெளியிடப் போவதில்லை, மீண்டும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.
இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருந்த மேகா-வுக்கு இது பிறந்த நாள் அதிர்ச்சியாக அமைந்துவிட்டது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மேகா. சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளவருக்கு ‘வர்மா’ படம்தான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 7ம் தேதியான நேற்று அவருடைய பிறந்த நாளாம். ‘வர்மா’ படம் பற்றிய தகவல் தனக்குத் தெரியாது என்றும், விரைவில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படத்தை மீண்டும் தயாரிக்கும் போது நாயகன் துருவ்வை மட்டும் மாற்றப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதால், இயக்குனர், நாயகி, இசையமைப்பாளர், மற்ற நடிகர்கள் அனைவரும் மாற்றப்படவும் வாய்ப்புள்ளது.
தன் முதல் அறிமுகப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த மேகாவுக்கு பிறந்த நாள் அதுவும் இப்படி ஒரு அதிர்ச்சி நிச்சயம் தாங்க முடியாத ஒன்றுதான்.