Samayal Samayal with Venkatesh Bhatt is one popular cookery show in the form of series featuring Chef Venkatesh Bhatt cooking lip smacking recipes.
The show is now premiered every Saturday at 1 pm.
The show features Venkatesh Bhatt sharing his experience and knowledge with cooking techniques, and demonstrating his handpicked recipes from various cuisines.
The way he delicately cuts veggies, his cooking gadgets and his cooking style are few little things that allures any group of audience to get glued to the television screen.
The show has crossed 120 episodes already. There may be many dishes from various cuisines across the world. But there is this one dish which has a special space in south Indian’s heart, especially Tamilians.
Yes ! It’s the lip smacking and spicy dish Briyani. Chennai’s Best Biryanis’ range from roadside to Five star hotels.
So, a good news for all the Briyani lovers out there! Here is a Briyani special episode this week in Samayal Samayal. For the majority when we say Briyani, it mostly implies chicken briyani in mind.
But Vegans, It’s a news to cheer on, as there will be two Vegetarian and Non-Vegetarian briyani dishes demonstrated. So viewers, get your paper and pen ready to note down the delicious recipes of briyani.
Don’t miss the Briyani special episode this week.
விஜய் தொலைக்காட்சியின் ‘சமையல் சமையல் வித் வெங்கடேஷ் பட்’ சமையல் நிகழ்ச்சி மிக பிரபலமானது.
இதில் செஃப் வெங்கடேஷ் பட், நம் நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள் மட்டுமல்லாமல், பல நாடுகளின் சிறந்த உணவு வகைகளைச் செய்து காட்டுவார். சமையல் செய்து கொண்டே அதன் நுணுக்கங்களையும் தன் அனுபவங்களையும் நேயர்களிடம் பகிர்ந்து கொள்வார்.
120 எபிசோடுகளை கடந்து விட்ட இந்த நிகழ்ச்சி மற்ற சமையல் நிகழ்ச்சிகளுக்கு இடையே நேயர்களால் அதிகம் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அவர் சமையல் செய்யும் முறை பலரால் விரும்பப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்நிகழ்ச்சியில் அவர் உபயோகிக்கும் சமையல் கருவிகளும் சுவாரசியத்தைத் தருகின்றன.
எத்தனை உணவு வகைகள் எத்தனை நாடுகளிலிருந்து வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பிரியாணி என்னும் அந்த உணவின் மீது உள்ள ஆசை குறையாது.
பிரியாணி விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி. இந்த வாரம் சமையல் சமையலில் நேயர்களுக்காகவே ‘பிரியாணி ஸ்பெஷல்’ ஆக அமைய உள்ளது. பிரியாணி என்று சொன்னதும் நம்மில் பலரின் கண் முன் வருவது சிக்கன் பிரியாணி தான்.
அதனால் சைவ உணவு விரும்பிகள் வருந்த வேண்டாம். இந்த வாரம் இரண்டு சைவ பிரியாணி வகைகள் மற்றும் அசைவ பிரியாணி வகைகள் செய்து காட்டப்படும்.
உங்கள் நோட்டு பேனாக்களை தயாராக வைத்து கொள்ளுங்கள்.
இந்த வரம் சமையல் சமையல் நிகழ்ச்சியை பார்த்து மேலும் சுவை மிகுந்த பிரியாணியை செய்து பழக தயாராகுங்கள்.