சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுவாதி

‘சுப்பிரமணியபுரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்களில் நாயகியாக நடித்தவர் சுவாதி.

கேரளாவைச் சேர்ந்த பைலட் ஒருவரைக் காதல் திருமணம் செய்து கொண்டு, இந்தோனேசியாவில் செட்டிலாகிவிட்டார்.

நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும், அவருடைய கணவரும் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். இதையடுத்து கணவரை விவாகரத்து செய்யப் போகிறாரோ என தெலுங்கு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

அவற்றிற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் சுவாதி. இன்ஸ்டாகிராமில் உள்ள இருவரது புகைப்படங்களையும் அவர் ‘ஆர்க்கிவ்’-ல் சேமித்து வைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் சுவாதியின் விவாகரத்து சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் செய்வது ஒவ்வொன்றும் எப்படியெல்லாம் செய்தியாக உருமாறுகிறது

Read Previous

‘ஹீரோ’ படத்திற்குத் தொடரும் தடை

Read Next

‘அண்ணாத்த’ வில்லனா ?, தெலுங்கு நடிகர் மறுப்பு

Most Popular