அடுத்த படம் ‘புறநானூறு’? – சுதா கொங்கரா பதில்

தனது அடுத்த படம் ‘புறநானூறு’ இருக்குமா என்பதற்கு சுதா கொங்கரா பதிலளித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பினைப் பெற்ற படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தினை இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் ‘சார்ஃப்ரியா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தி ரீமேக்கினையும் சுதா கொங்கராவே இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தினை விளம்பரப்படுத்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார் சுதா கொங்கரா. இதில் தனது அடுத்த படம் குறித்து பேசியிருக்கிறார். அதில் சுதா கொங்கரா பேசியிருப்பதாவது:

“’புறநானூறு’ ஒரு இந்தி திணைப்பு எதிர்ப்பு அமைப்பைப் பற்றிய கதை. எனது அனைத்து படங்களுமே ஒரு விதத்தில் ஒடுக்குமுறை எதிர்ப்பினை பற்றியே பேசுகின்றன. அடுத்த படம் தமிழில் தான் இயக்கவுள்ளேன். அது ‘புறநானூறு’ கதையா அல்லது வேறு கதையா என்பது இன்னும் முடிவாகவில்லை”

இவ்வாறு சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

முன்பாக, சூர்யா – துல்கர் சல்மான் – நஸ்ரியா – விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் ‘புறநானூறு’. ஆனால், அந்தப் படம் பின்னர் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், திரையுலகினர் மத்தியில் கைவிடப்பட்டதாகவே கூறப்படுகிறது.

Read Previous

சிக்கலில் ‘ப்ளடி பெக்கர்’: வெளியீடு ஒத்திவைப்பு

Read Next

7 ஜி – விமர்சனம்

Most Popular