ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’

வெளிநாடுகளில் பல இந்தியத் திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு 'சொப்பன சுந்தரி' எனப் பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளார்கள். இதனுடன் 'சொப்பன சுந்தரி' என்ற தலைப்பிற்கான காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

'லாக்கப்' படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். பத்தில் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 
பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இத் திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார். அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைக்கின்றனர். 

டார்க் காமெடியில் தயாராகி இருக்கும் 'சொப்பன சுந்தரி' என்ற பெயர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர். நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி- செந்தில் தொடங்கி, இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸின் முந்தைய படத்தின் வில்லனான இயக்குநர் வெங்கட் பிரபு வரை, இந்தப் பெயரை பயன்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார்கள். 

Read Previous

உறியடி விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Read Next

கணம், வழக்கத்திற்கு மாறான ஒரு படம் – அமலா

Most Popular