சித்தார்த் – அதிதி ராவ் ரகசிய திருமணம்

தெலுங்கானாவில் உள்ள கோயிலில் சித்தார்த் – அதிதி ராவ் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். சமீபத்தில் இவர் தயாரித்து, நடித்திருந்த ‘சித்தா’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சில மாதங்களாகவே சித்தார்த் – அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இருவருடைய சமூக வலைதள பதிவுகள் அமைந்தன.

தற்போது, சித்தார்த் – அதிதி ராவ் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கநாயகசுவாமி கோயிலில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் மிகவும் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர். இருவருக்குமே முதல் திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்த திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

விஜய் படத்தை இயக்குகிறேனா ? – வெற்றிமாறன் பதில்

Read Next

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ஆலகாலம் திரைப்பட ட்ரெய்லர்

Most Popular