2023-ம் ஆண்டு இந்தி திரையுலகில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய ஷாரூக்கான்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாரூக்கான். இவருடைய படங்கள் யாவுமே உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தும். 

ஆனால், ‘பேன்’,  ‘ஜீரோ’ உள்ளிட்ட படங்களின் தோல்வியால் 2018-ம் ஆண்டிற்குப் பிறகு அவருடைய படங்கள் எதுவுமே வெளியாகவில்லை.

கொரோனா காலத்திற்குப் பிறகு, மீண்டும் தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2023-ம் ஆண்டு இவருடைய நடிப்பில் ’பதான்’, ‘ஜவான்’ மற்றும் ‘டங்கி’ ஆகிய படங்கள் வெளியாகின. இதில் ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ இரண்டுமே உலகளவில் வசூல் சாதனையை நிகழ்த்தின.

இந்நிலையில், 2023-ம் ஆண்டு இந்தித் திரையுலகின் ஒட்டுமொத்த வசூல் 4418 கோடியாகும். இதில் ஷாரூக்கானின் படங்கள் மட்டுமே 2600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 

இது மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஒட்டுமொத்த வருடத்தின் வசூலில் ஷாரூக்கான் படங்களின் வசூல் மட்டும் சுமார் 50 சதவீதத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

அனைத்தையும் குறைச் சொல்ல ஒரு கூட்டம் இருக்கிறது: தனுஷ் வேதனை

Read Next

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் விடுதலை 1 & 2