சார்பட்டா பரம்பரை, வாழ் – ஓடிடி வெளியீடு

கொரானோ இரண்டாவது அலையில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் நிறைய புதுப் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ படத்தைத் தவிர வேறு எந்தப் பெரிய புதுப படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவில்லை. இருப்பினும் பல புதிய படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இப்போது ஒவ்வொரு படமாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த விதத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துளள ‘சார்பட்டா பரம்பரை’ படம் ஜுலை 16ம் தேதியன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

‘அருவி’ படத்தை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ள ‘வாழ்’ படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஜுலை 22ம் தேதியன்றும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் மேலும் சில படங்களுக்கான ஓடிடி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

‘கேஜிஎப் 2’ படத்தை தமிழில் வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

Read Next

வாழ் – டிரைலர்