பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் 2018ல் வெளிவந்த கன்னடப் படமான ‘கேஜிஎப்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வசூலைப் பெற்றது.
அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாக புதிய சாதனைகளைப் படைத்தது.
இந்த ‘கேஜிஎஃப்: சேப்டர் 2’ படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கேஜிஎப் 2’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தமிழில் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.