பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

'கேஜிஎஃப்' படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தைத் தயாரித்து வருகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தூர் தயாரிக்க, ‘கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி வரும் படம் இது.

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இப்படத்தின் புதிய போஸ்டருடன் வெளியீட்டுத் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அடுத்த வருடம் செப்டம்பர் 28ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இதற்காக ஒட்டுமொத்த குழுவும் திட்டமிட்டபடி இயங்கி வருகிறது. இப்படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால், தயாரிப்பாளர்கள் இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். 

இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

'பாகுபலி', :கே ஜி எஃப்' என இந்திய திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அளித்திருக்கும் இந்தக் கூட்டணி, மீண்டும் சரித்திர வெற்றியை உருவாக்க இணைந்திருப்பதால், 'சலார்' திரைப்படத்திற்கு தேசிய அளவில் பெரும் கவனம் கிடைத்துள்ளது. 

'சலார்' திரைப்படம் 400 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட படைப்பாகத் தயாராகி வருகிறது.

Read Previous

ஓடிடி-யில் வெளியாகும் ‘ஜீவி 2’

Read Next

அடுத்தடுத்து மூன்று படங்களை வெளியிடும் சசிகலா புரொடக்ஷன்ஸ்