வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’

மகரிஷி கோண்ட்லா வழங்க, மகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், மகேந்திர நாத் கோண்ட்லா தயாரிப்பில் அனில்காட்ஸ் இயக்கி வரும் படம் ‘சபரி’.

இப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் இதுவரை நடிக்காத புதுமையான வேடத்தில் நடிக்கிறார். 

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படம், உகாதி தினத்தன்று துவங்கப்பட்டு, தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் துவக்கத்தை குறிக்கும்  போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். 

‘சபரி’ திரைப்படம் காதல் மற்றும் க்ரைம் கலந்த  புதிரான கதையாகும். ஒரு தீவிரமான உளவியல் த்ரில்லர் படமாகவும் இருக்குமாம். கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கோபி சுந்தர் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஹைதராபாத், விசாகப்பட்டினம், கொடைக்கானலில் உள்ள சில அழகான இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குநராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத்தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.

Read Previous

ஜீ 5 – பிரகாஷ்ராஜ் நடிக்கும் ‘அனந்தம்’ இணைய தொடர்

Read Next

சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட ஆன்ட்ரியா நடிக்கும் ‘நோ என்ட்ரி’

Most Popular