ஆர்ஆர்ஆர் – தமிழ்நாட்டில் 550 தியேட்டர்களில் வெளியிடும் லைக்கா

டிவிவி என்டர்டெயின்மென்ட் சார்பாக, டிவிவி தனய்யா தயாரிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், கீரவானி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இப்படம் நாளை மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.  ‘பாகுபலி 2’ படத்தைக் காட்டிலும் 150 தியேட்டர்கள் அதிகமாக சுமார் 550 தியேட்டர்களில் இப்படம் தமிழ்நாட்டில் வெளியாகிறது.

படத்தில்அல்லூரி சீதாராம ராஜுவாக ராம் சரண் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர்.

கொமரம் பீம் ஆக ஜுனியர் என்டிஆர் நடித்துள்ளார். ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் கொமரம் பீம்.

இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு என்று இயக்குநர் திரு ராஜமௌலி கூறியுள்ளார்.

ராம் சரணின் காதலி சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார். ஒலிவியா மோரிஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 

இந்தியத் திரையுலகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் வசூலையும், வரவேற்பையும் பெறும் என திரையுலகத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Previous

டிரென்டிங்கில் ‘கேஜிஎப் 2’ படத்தின் ‘தூபான்’ பாடல்…

Read Next

ஆர்ஆர்ஆர் – விமர்சனம்