டிரென்டிங்கில் ‘கேஜிஎப் 2’ படத்தின் ‘தூபான்’ பாடல்…

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் 2'. 

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. அடுத்து அதன் இரண்டாம் பாகமான ‘கே ஜி எஃப் 2’  திரைப்படம், ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'கே ஜி எஃப் 2' படத்தில் கதையின் நாயகனாக யாஷ்  நடித்திருக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் பாடலாசிரியர் மதுரகவி எழுதி, ' தூஃபான்' எனத் தொடங்கும் பாடல் யு டியூபில் வெளியானது. யூடியூப் இணையதளத்தில், 'மியூசிக்' பிரிவில்  முதலிடத்தைப் பெற்று, ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தப் பாடலில் யாஷின் தோற்றமும், பாடகர்களின் உணர்ச்சிகரமான குரல்களும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

'கேஜிஎஃப்' படத்தின் முதல் பாகத்தைப் போலவே பிரம்மாண்டமான காட்சி அமைப்பின் பின்னணியில் 'தூஃபான்..' பாடல் இடம் பெற்றிருப்பதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

Read Previous

‘மன்மத லீலை’ என்ன மாதிரியான படம் – படக்குழு விளக்கம்

Read Next

ஆர்ஆர்ஆர் – தமிழ்நாட்டில் 550 தியேட்டர்களில் வெளியிடும் லைக்கா

Most Popular