ஆர்ஆர்ஆர் – புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’.

ஜனவரி 7ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரானோ மூன்றாவது அலையால் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்தனர். 

இப்போது படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 25ம் தேதி இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.

ஜனவரி மாதம் முதல் காத்திருந்த ரசிகர்களுக்கு  இந்த அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Read Previous

நான்கு மொழிகளில் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் ‘மகான்’ டீசர்

Read Next

மகான் – டிரைலர்

Most Popular