நான்கு மொழிகளில் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் ‘மகான்’ டீசர்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபிசிம்ஹா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மகான்’.

பிப்ரவரி 10ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இன்று நான்கு மொழிகளிலும் படத்தின் டீசரை யு டியூபில் வெளியிட்டுள்ளார்கள்.

நட்பு, போட்டி, விதியின் விளையாட்டு என பல சம்பவங்கள் பின்னிப் பிணைந்த இந்தப் படத்தில்  அப்பா, மகனான விக்ரம், துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார்கள். 

டீசர் வெளியான சில மணி நேரங்களுக்குள் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Read Previous

விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் ‘மகான்’ டீசர்

Read Next

ஆர்ஆர்ஆர் – புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு