இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ராமாயணம் திரைப்படத்தின் அடுத்த பிரம்மாண்ட அப்டேட் வெளியாகியுள்ளது. நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராவணனாக நடிக்கும் யாஷ்-ன் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தங்கக் கிரீடம், முத்து மாலைகள், பிரம்மாண்டமான தங்க ஆபரணங்கள் என ராஜ கம்பீர தோற்றத்தில் இருக்கிறார் யாஷ்.
டிரைலர் வெளியானது முதலே யாஷின் ராவணன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
வலிமை, அறிவு, அதிகாரம் மற்றும் கம்பீரம் என ராவணனின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் யாஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் ஆகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளார்கள்.
இந்த பிரம்மாண்ட காவியம், தீபாவளி 2026-ல் பாகம் 1 ஆகவும், தீபாவளி 2027-ல் பாகம் 2 ஆகவும் வெளியாக உள்ளது.