மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நிறைவு

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக  T.முருகானந்தம் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’.
 
கதையின் நாயகியாக ஆன்ட்ரியா நடிக்க  உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.  

திண்டுக்கல்லில் மூன்று கட்டமாக நடைபெற்ற ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் மிஷ்கின் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் தனது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
 
இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
தியேட்டர்களில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Read Previous

கன்னித்தீவு – டீசர்

Read Next

விஷால் நடிக்கும் 32வது படம் இன்று ஆரம்பம்

Most Popular