இயக்குனர் வெற்றிமாறன், ஆஹா ஓடிடி தளம் இணையும் ‘பேட்டைக்காளி’

ஆஹா தமிழ் ஓடிடி தளத்துடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் 'பேட்டைக் காளி' வெப் தொடரின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழர்களின் வீர விளையாட்டான 'ஜல்லிக்கட்டு' விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமகால தமிழ் சினிமாவில் கவனிக்கத்த இயக்குநர்களில் ஒருவரான  வெற்றிமாறன் படைப்பாக வரும் இந்த இணைய தொடரில் மக்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு ஜல்லிக்கட்டு உலகத்தை பார்ப்பார்கள். ஏற்கனவே 'பேட்டைக்காளி' என்ற இந்தத் தலைப்பு, பார்வையாளர்காளிடையே 'யாரந்த பேட்டைக்காளி' என்ற ஆர்வத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையத் தொடர், நல்ல கதையம்சத்துடன் கூடிய நடிகர்கள் மற்ற தொழில்நுட்பக் குழுவைக் கொண்டது. 

இயக்குநர் வெற்றிமாறன் இதன் ஷோ-ரன்னராக இருந்தாலும் 'பேட்டைக்காளி' படத்தை வெற்றிமாறனின் நீண்ட கால உதவி இயக்குநரான ராஜ்குமார் இயக்கி உள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும்.

Read Previous

நானே வருவேன் – விமர்சனம்

Read Next

விமர்சனங்களுக்கு நன்றி சொன்ன ‘ஆதார்’ இயக்குனர் ராம்நாத்