அனுஷ்கா, மாதவன் நடிக்கும் ‘நிசப்தம்’ – ஏப்ரல் 2 ரிலீஸ்

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க,  ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிசப்தம்’. 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, டிரைடன்ட் ஆர்ட்ஸ் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.        
 
இப்படம் அமெரிக்கவாழ் இந்தியர்களின் வாழ்வை மையமாகக் கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதைக் களமாக உள்ளது.

இப்படத்தில் ஒரு வாய் பேசமுடியாத, காது கேட்காத பெண்ணாக, நடித்திருக்கிறார் அனுஷ்கா. 

படம் முழுவதையும் அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.   

மாதவன், அனுஷ்கா ஷெட்டி ஆகியோருடன் அஞ்சலி, மைக்கேல் மேட்சன், ஷாலினி பாண்டே, சுப்பராஜூ, ஸ்ரீநிவாஸ் அவசரலா மற்றும் ஹன்டர் ஓ’ஹேரோ ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷானில் தியோ ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் புடி படத்தொகுப்பை கவனிக்க, அலெக்ஸ் டெர்சிஃப் சண்டை காட்சிகளை அமைக்க, சாட் ராப்டர் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்று இருக்கிறார்.

இப்படத்திற்கு மணி சியான் வசனம் எழுத,கருணாகரன் பாடல்களை எழுத, கோபி சுந்தர் இசையமைக்க, பின்னணி இசையை கிரீஷ் கோவிந்தன் அமைத்துள்ளார்.

Read Previous

Kaadan – Official Teaser

Read Next

பிப்ரவரி 14, 2020 வெளியான படங்கள்

Most Popular