தமிழில் இதுவரை எத்தனையோ ஆல்பம் பாடல்கள் வந்துள்ளது. அதில் பல புதுமையானவையாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் முற்றிலும் புதுமையாக திரைப்படத்துறை அனுபவம் கொண்ட பலர், சில அனுபவசாலிகள் இணைந்து ‘எனக்கெனவே’ என்ற ரொமாண்டிக் வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த ரொமண்டிக் மியூசிகல் ஆல்பத்துக்கு இசை கணேசன் சேகர். இவர் G.V.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த ‘ப்ருஸ் லீ’ திரைப்படத்தில் இடம் பெற்ற “நான்தான் கொப்பன்டா“ சிங்கிள் பாடலுக்கு இசையமைத்தவர்.
‘எனக்கெனவே’ ஆல்பப் பாடலை இயக்குநர் M.ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் ஸ்ரீ இயக்கியுள்ளார். கவிஞர் முத்தமிழ் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர், பாடகர்ட, நடிகர் G.V. பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.
‘கபாலி , பைரவா’ போன்ற படங்களின் படத்தொகுப்பைக் கவனித்த தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். ஒளிப்பதிவு :- சுந்தர் ராகவன் இவர் பிரபல ஒளிப்பதிவாளர் நட்டியிடம் துணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். நடனம் – அசார், கலை – மதன், விளம்பர வடிவமைப்பு – மணிகண்டன்.
அழகிய காதல் பாடலான ‘எனக்கெனவே’ ஆல்பத்தில் நாயகனாக ராகேஷ் ராஜன், நாயகியாக ஸ்முருத்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
அனுபவம் வாய்ந்த குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை மெட்ராஸ் டெக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெகதீசன் R.V, நவநீத பாபு, நரேன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
விரைவில் இப்பாடலின் முதல் பார்வை ப்ரோமோ வெளியாகவுள்ளது. தொடர்ந்து முழுப் பாடலும் வெளியாகும்.
‘எனக்கெனவே’ ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ள குழுவினர் ஒன்றாக இணைந்து அடுத்து திரைப்படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளனர்.