‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, பிப்ரவரி 2ம் தேதி வெளியீடு

7 சிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.

ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசரும், விதவிதமான போஸ்டர்களும், பாடல்களும் படம் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டில் வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டில் வெளிவர இருக்கும் முதல் படம் இது. ஒரு வித்தியாசமான நகைச்சுவைப் படமாகவும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2ம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.

Read Previous

இரும்புத் திரை, பெரிய ஊழலைப் பேசும் படம் – விஷால்

Read Next

‘ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2’ குறும்படப் போட்டி அறிவிப்பு

Most Popular