‘காலா’ டப்பிங்கில் ரஜினிகாந்த்

‘கபாலி’ படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த், ரஞ்சித் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படம் ‘காலா’.

நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கான டப்பிங் வேலைகள் சில வாரங்களுக்கு முன்பே சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் ஆரம்பமான நிலையில் ரஜினிகாந்த் தற்போது அவருடைய டப்பிங்கை ஆரம்பித்துள்ளார்.

காலா திரைப்படம் ‘2.0’ படம் வெளிவந்த சில மாதங்களுக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

‘மன்னர் வகையறா’ சிறப்புகள் சொல்லும் பூபதி பாண்டியன்

Read Next

‘மோகினி’யில் அதிர வைக்கும் த்ரிஷா