கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் 2013ம் ஆண்டு வெளிவந்தது.
அப்போதே அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஏறக்குறைய முடித்துவிட்டார் படத்தின் இயக்குனரும், நாயகனுமான கமல்ஹாசன். ஆனால், அந்தப் படம் சில சிக்கல்களால் கடந்த ஐந்து வருடங்களாக முடிவடையாமல் இருந்தது.
கடந்த வருடம் அந்தப் படத்தின் சில இறுதிக் கட்டப் பணிகளை அமெரிக்கா சென்று முடித்துவிட்டு வந்தார் கமல்ஹாசன்.
இந்த வருடக் கோடை விடுமுறையில் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரான் இன்று அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலரும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.