‘நீயா 2’ படத்தில் ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரேசா

கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘நீயா’.

தமிழில் பின்னர் வெளிவந்து ஓடிய பாம்பு, பேய் படங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியது அந்தப் படம்தான்.

39 வருடங்களுக்கு பின் ‘நீயா 2’ படம் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.

இந்தப் படம் பற்றி இயக்குனர் எல்.சுரேஷ் கூறியதாவது,

“கதைக்குத் தேவைப்பட்டதால் ‘நீயா 2’ எனப் பெயர் வைத்திருக்கிறோம். இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 – அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம் பெறுகிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியாவிலும், தாய்லாந்து நாட்டிலும் தேடினோம்.

இறுதியாக தாய்லந்து தலைநகர் பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தைப் பார்த்தோம். அதன் அமைப்பு, உடல் மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். படம் முழுக்க வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமைந்துள்ளது.

படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். வித்தியாசமான வேடம் அவருக்கு. இரண்டு வித பரிமாணத்தில் கண்டிப்பாக அசத்துவார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார், மேலும் ராய்லட்சுமி , கேத்தரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் மற்றும் பலர் நடிக்கும் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

தொடர்ந்து தலக்கோணம் , சென்னை, மதுரை, கொடைக்கானல், சாலக்குடி பகுதிகளில் நடைபெறும். அழுத்தமான காதல் கதையுடன் காமடி கலந்த ஹாரர் படமாக சுமார் 10 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் A.ஸ்ரீதர் தயாரிக்கிறார்
.
திரையுலகில் பலவருடங்கள் தயாரிப்பு துறையில் அனுபவம் பெற்ற இவர் தயாரிக்கும் முதல் படம் இது,” என்றார் இயக்குனர்.

Read Previous

Goli Soda 2 Official Trailer

Read Next

அபி சரவணன் நடிக்கும் ‘வெற்றிமாறன்’