விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், எப்படி ?

தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் விரைவில் முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்க உள்ளார்கள்.

இருவர் கைவசமும் சில படங்கள் இருப்பதால் அவர்களை இப்போதே முழு நேர அரசியல்வாதி என சொல்ல முடியாது. சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பிறகுதான் முழு நேர அரசியல்வாதி என சொல்ல முடியும்.

தமிழ்த் திரையுலகத்தில் ஏற்கெனவே விஜய், அஜித் ஆகிய இருவருக்கும் சூப்பர் ஸ்டார் பட்டம் மேல் மிகப் பெரும் ஆசை. அது பற்றி பல இதழ்களில், நாளிதழ்களில் செய்திகள் வந்து அடங்கின.

தற்போது ரஜினிகாந்த் அரசியல் பக்கம் சாய்வதால், தமிழ் சினிமாவில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி விரைவில் எழலாம்.

அதற்குப் பொருத்தமானவராக விஜய் தான் இருக்க முடியும் என்பதை யு டியூபில் விஜய் படங்களின் டீசர்கள், பாடல்கள் ஆகியவற்றிற்கு ரசிகர்கள் கொடுப்பதில் இருந்து நன்றாகவே புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக பாடல்களை விட படங்களின் டீசர்கள்தான் முதலில் பெரும்பாலும் வெளியாகும். அவைதான், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும். அந்த விதத்தில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் கடைசி மூன்று படங்களின் டீசர்கள் யு டியுபில் எவ்வளவு பார்வைகள், லைக்குகள் பெற்றுள்ள என்பது பற்றிய ஒரு கணக்கு கீழே…(மார்ச் 14, 2018 – இரவு 8 மணி நிலவரப்படி)

விஜய்

மெர்சல் டீசர் 

பார்வைகள் – 3,79,49,782 , லைக்குகுள் –  10,00,000

பைரவா டீசர்

பார்வைகள் – 1,60,91,408, லைக்குகள் – 2,87,000

தெறி டீசர்

பார்வைகள் – 1,20,32,219, லைக்குகள் – 3,32,000

ரஜினிகாந்த்

காலா டீசர்

பார்வைகள் – 2,02,80,707 , லைக்குகள் – 4,78,000

கபாலி டீசர்

பார்வைகள் – 3,50,55,546, லைக்குகள் – 4,71,000

லிங்கா டீசர்

பார்வைகள் – 44,60,652, லைக்குகள் – 20,000

அஜித்

விவேகம் டீசர்

பார்வைகள் – 2,29,19,073, லைக்குகள் – 6,05,000

வேதாளம் டீசர்

பார்வைகள் – 73,40,323  லைக்குகள் – 1,70,000

என்னை அறிந்தால் டீசர்

பார்வைகள் – 57,05,682, லைக்குகள் – 1,00,5000

விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த மூன்று படங்களின் டீசரும் சராசரியாக 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன. ரஜினிகாந்த்தின் இரண்டு படங்கள் சராசரியாக 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன. அஜித்தின் விவேகம் மட்டுமே 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன.

லைக்குகுளில் விஜய் நடித்த ‘மெர்சல்’ 10 லட்சம் லைக்குகளைப் பெற்று உலக சாதனையுடன் உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டு படங்கள் 4,70,000 லைக்குகளைக் கடந்துள்ளன. அஜித்தின் ‘விவேகம்‘ டீசர் மட்டும் 6 லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளது.

அனைத்திற்குமே ஒரு ஆராய்ச்சி செய்வதாக புள்ளிவிவரங்களை வெளியிடுபவர்கள் சொல்வார்கள். ஆனால், அவர்கள் எப்படி எந்த தரவின் அடிப்படையில் ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள் என்பதை வெளியில் சொல்ல மாட்டார்கள்.

ஆனால், யு டியூபில் உள்ள இந்த பார்வைகள், லைக்குகுள் அனைத்துமே அனைவரின் பார்வைக்கும் உள்ளவை.

அதனால், அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதற்குப் பொருத்தமானவர் விஜய் மட்டுமே.

 

Read Previous

ரஜினி, கமலுக்கு தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் வேண்டுகோள்

Read Next

‘கண்ணே கலைமானே’, கற்றுக் கொண்ட உதயநிதி

Most Popular