‘கண்ணே கலைமானே’, கற்றுக் கொண்ட உதயநிதி

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி முதன் முறையாக நடிக்கும் படம் இது. இதற்கு முன் சீனு ராமசாமி இயக்கிய ‘நீர் பறவை’ படத்தைத் தயாரித்தது உதயநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஜோடியாக தமன்னா நடிக்கும் முதல் படம் இது, உதயநிதி நடிக்கும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா முதல் முறை இசையமைக்கும் படம் இது என சில முதல் விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன.

கடந்த ஜனவரி மாதத்தில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு குறுகிய காலத்தில் முடிவடைந்துள்ளது.

படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றதை முன்னிட்டு இயக்குனர் சீனு ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார். “ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் கண்ணே கலைமானே படப்பிடிப்பு இன்று  நிறைவு பெற்றது.உடன் உழைத்த சினிமா தொழிலாளர்களுக்கும்,அனைத்து கலைஞர்களுக்கு அன்பும் நன்றியும்…”, எனக் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், “கண்ணே கலைமானே’ படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த வாய்ப்புக்கு நன்றி சீனு சார். உங்களிடமிருந்து யதார்த்த சினிமா உருவாக்குவது எப்படி என்று கற்றுக் கொண்டேன். அனைத்து ஆதரவிற்கும் நன்றி தமன்னா. ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன், உடன் நடித்தவர்கள் மற்ற கலைஞர்கள், யுவன்ஷங்கர் ராஜா மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.

தமன்னா, “உதயநிதி ஸ்டாலின், கடைசியாக நாம் இருவரும் சேர்ந்து நடித்து விட்டோம். உங்களுடன் நடிக்க வேண்டும் என்பதும் ஆசை. சீனு ராமசாமி சார், உங்களுடன் பணி புரிவது வீட்டிலேயே ஷுட்டிங் நடப்பது போல, நன்றி,” எனக் கூறியுள்ளார்.

 

Read Previous

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், எப்படி ?

Read Next

எஸ்பி பாலசுப்பிரமணியம், ஒரு நீண்ட அறிமுகம்