தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் நட்சத்திரமாக இருப்பவர் நயன்தாரா. ‘அறம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான, ‘கர்த்தவ்யம்’ படம் கடந்த வாரம் வெளியாகி, அனைவரின் வரவேற்பையும் பெற்று வருகிறது.
கோலிவுட் ஸ்டிரைக் முடிந்ததும் ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் வெளியாக உள்ளது. ‘கொலையுதிர் காலம்’ படம் பற்றிய தகவலே இல்லை .
அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்தில் மட்டுமே நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்காக கொடுத்திருந்த கால்ஷீட்டுகளை கோலிவுட் ஸ்டிரைக்கால், தெலுங்கில் அவர் நடிக்கும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்திற்காகக் கொடுத்துவிட்டார்.
நயன்தாரா முதல் முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும், சரித்திரப் படமாக ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படம் உருவாகவுள்ளது .