‘பாகுபலி 2’க்கு சென்சார் வழங்கியது சீனா, விரைவில் ரிலீஸ்

சீனா நாட்டில், சமீப காலமாக இந்தியப் படங்களுக்கு பெரும் மவுசு இருந்து வருகிறது. சென்ற ஆண்டு சீனாவில் வெளியான ஆமீர்கான் நடித்த ‘தங்கல்’ படம் சுமார் 1500 கோடிக்கும் மேல் வசூலானது .

சில வாரங்களுக்கு முன் சல்மான் கானின், ‘பஜ்ரங்கி பைஜான்’ வசூல் 200 கோடியை தாண்டியது.

அரசியல் சூழ்நிலை காரணமாக ‘பாகுபலி 2′ படம் சீனாவில் வெளியிட முடியவில்லை.

தற்போது ‘பாகுபலி 2’ படத்திற்கு சென்சார் கிடைத்துவிட்டதால், படத்தின் முதல் பாகத்தை வெளியிட்ட நிறுவனமே இரண்டாவது பாகத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளது. இதைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

Read Previous

முன் அனுமதி பெற்று நடந்த விஜய் படத்தின் படப்பிடிப்பு

Read Next

ஸ்ரேயா திருமணப் புகைப்படமும் ‘லீக்’