‘கரு’ படத்தின் பெயர் ‘தியா’ என மாற்றம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நாக சௌரியா, சாய் பல்லவி நடித்த ‘கரு’ படத்தின் பெயர் ‘தியா’ என மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகத்தில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் முன்னர் வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அந்த வரிசையில் ‘தியா’ படம் அடுத்த வாரம் 27ம் தேதி வெளியாக உள்ளது.

மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் நடித்து புகழ் பெற்ற தமிழ் நடிகையான சாய் பல்லவி, தமிழில் அறிமுகமாகும் படம் இது. தெலுங்கு நடிகரான நாக சௌரியா தமிழில் அறிமுகமாகும் முதல் படமும் இதுவே.

இப்படத்தை தெலுங்கில் ‘கனம்’ என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்.

இப்படத்துடன் அடுத்த வாரம் ‘பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களும் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Read Previous

சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’

Read Next

மெர்க்குரி – விமர்சனம்

Most Popular